Share on                    

Opening Hours : 24 x 7
  Contact : Emergency: +91 8939 59 9999

All Posts in Category: Blog

உறுப்பு தானம்

உறுப்பு தானம்

உறுப்பு தானம் இரண்டு வகைப்படும் உயிரோடிருப்பவர் தானம் தருவது, மூளைச்சாவு அடைந்த பின்பு தானம் தருவது, உடலையே மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக தானம் தருவது.

இதில் முக்கியமாக தெரிந்து கொள்ளவேண்டியது தானம் தருபவர் இறந்துவிட்ட பின்பு அவரின் உறவினர் அனுமதித்தால் மட்டுமே தானம் செய்யமுடியும்.

இருதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல், எலும்பு, தோல், குடல், கண்விழி வெண்படலம் (cornea), இரத்தக் குழாய்கள், (சிரை, தமனி), கணையம், தசைநார்கள் போன்றவைகளை தானமாக தரலாம்.

உயிரோடிருப்பவர் இரத்தம், என்பு மஜ்ஜை சிறுநீரகம், கணையம், கல்லீரல், குடல், தோல் போன்றவற்றை தானமாக தர இயலும்.

தானமாக உடலைத்தர ஒருவர் உறுப்பு தானத்தை நடைமுறைபடுத்தும் NOTTO, ROTTO போன்ற அமைப்புகளிடம் பதிந்து, donor card ஒன்றை பெற்றுக்கொள்ளவேண்டும். இந்த card வெறும் அங்கீகாரம் மட்டுமே, card இருப்பதாலேயே தானம் தர இயலாது, இறந்தவர் உறவினரின் அனுமதி வேண்டும்.

அவ்வாறு ஒருவர் இறந்துவிட்டால், இந்த card இல் உள்ள மருத்துவ குழுவிற்கு தகவல் தரவேண்டும் உடனடியாக. அவர்கள் விரைந்து வந்து கண்வெண்படலம் போன்றவற்றை எடுத்துக்கொள்வார்கள்.

ஆனால், மூளைச்சாவு அடைந்தவர் மட்டுமே பிற உறுப்புகளை தானமாக தர இயலும். இது மருத்துவ மனையில் மட்டுமே சாத்தியம்.

வருடந்தோறும் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உறுப்புமாற்று தேவையாக உள்ளது. ஆனால் பத்து லட்சத்தில் ஒருவர் மட்டுமே தானமாக தருகிறார்கள். 2017 இல் இந்தியாவில் 905 நபர்கள் மட்டுமே தானம் தந்திருப்பதாக ஒரு தகவல். உறுப்பு தானம் இந்திய அளவில் 2% சதவிகித தேவையையே நிறைவு செய்கிறது.

உறப்பு தானத்தில் இந்தியாவின் முன்னோடி தமிழகம். Tamil Nadu  state transplant authority என்ற அமைப்பை முதலில் ஏற்படுத்தி உறுப்பு தானங்களை ஊக்குவித்த மாநிலம் தமிழகம். (இன்று இதையும் ஒன்றிய அரசு கட்டுபடுத்த நினைக்கிறது) இந்தியாவில் இந்த மாடலை தொடர்ந்தே NOTTO, ROTTO போன்றவை ஏற்படுத்தபட்டன.

இந்த TRANSTAN ஐ ஏற்படுத்த மருத்துவர் முனைவர் அமலோர்பாவநாதன்,  சிரை அறுவை துறை தலைவர், MMC ( இன்று TN planning commission இல் உள்ளார்) இதை ஏற்படுத்த உழைத்தவை ஏராளம். முற்போக்கு தமிழகத்தின்  மருத்துவ துறை எத்தனையோ நல்ல மருத்துவர்களால் கட்டப்பட்டது. கண்ணுக்கும், இந்த மண்ணுக்கும் தெரியாதவர்களே அதிகம்.

உறுப்பு தானம் உயிர் காக்கும் செயல், வாழ்நாளை நீட்டிக்கவும், பிறர் தயவு அல்லாது அன்றாடம் தம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் பயன்படும்.

உறுப்பு செயலிழப்பினால் நிச்சையமான மரணித்திலிருந்து காக்க உறுப்பு தானம்! உதவும்

உடலை தானம் தந்தால் மருத்துவ மாணாக்கர்க்கும், ஆய்வுகளுக்கும் பயன்படும்.

Mohan foundation என்ற NGO , உறுப்பு தானம் தர எண்ணுபவர்

களுக்கு மேலும் பல தகவல்களையும் பதிவதற்கான முறைகளையும் செய்யும்.

இணையத்தில் எளிதாக பதிந்து கொள்ளலாம்.

 

Dr. Venkatesh Natarajan

Read More

சிறுநீரக வியாதியின் அறிகுறிகள்

உப்பு

மருத்துவர்கள் நாள்பட்ட சிறுநீரக ரோகத்தை ரோகிகளுக்கு விளக்குவதற்காக பயன்படுத்தும்  ஒரு சொல்லாடல், “உங்களுக்கு இரத்தத்தில் உப்பு இருக்கிறது அதனால் உணவில் உப்பை அதிகமாக சாப்பிடாதீர்கள்” என்று கூறுவது. இது ஒரு தவறான அறிவுரை உப்பை குறைத்து சாப்பிடுங்கள் என்றால், உடனே ரத்தத்தில் உள்ள உப்பு, நாம் உணவில் உள்ள உப்பை குறைத்து விட்டால் குறைந்து விடும் என்ற தவறான புரிதலுக்கு வழிவகுக்கிறது.

கழிவுகளை வெளியேற்றாத சிறுநீரகத்தின் பாரத்தை குறைக்கவே உப்பை குறைக்க கூறுகிறார்கள்.

சிறுநீரக வியாதியின் அறிகுறிகள் என்ன?

ஆரம்ப நிலைகளில் அறிகுறிகள் இல்லை, முற்றிய நிலையிலேயே அறிகுறிகள் தோன்றும். அதனாலேயே உடலின் உள்ளே நிகழும் மாற்றங்களை கண்டறியும் யுக்திகள் தேவை. முறையே இவை சிறுநீரக வேலைகள் சரிவர நடக்கின்றனவா என்று கண்டுகொள்ள உதவும் பரிசோதனைகளாம். இது அறிவியல் மருத்துவத்தின் அபரிதமான வளர்ச்சி என்பதற்கு சான்று.

நான்கு வகையான அடிப்படை பரிசோதனைகள் மூலம் சிறுநீரக ஆரோக்கியத்தை அளக்க முடியும்.

  1. GFR
  2. Ultrasound of the kidneys.
  3. Urine examination.
  4. Kidney biopsy.

 

இங்கே creatinine என்ற கழிவு குறிக்கப்படவில்லை என்பதை கவனியுங்கள். Creatinine என்பது மாமிசத்தில் உள்ள ஒரு பொருளாகும். இதன் உற்ப்பத்தி வயது, மாமிசத்தின் அடர்த்தி, இனம், பால், உட்கொள்ளும் மருந்துகள் என பல காரணிகளால் வேறுபடும். 1300 மேற்பட்ட கழிவுகள் ( உப்புகள்) உற்பத்தியாகின்றன உடலில் அன்றாடம். சிறுநீரகம் நோயுற்றால் இவை தேங்கிவிடும். அதில் ஒன்றுதான் creatinine. எளிதாக அளக்கக்கூடியது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

Creatinine அளவைக்கொண்டு GFR கணிக்கப்படுகிறது.

GFR ஐக்கொண்டு, இரத்தம்சுத்தமாகிற நிலை கணிக்கப்படுகிறது. ஒரு நிமிடத்தில் எவ்வளவு இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது சிறுநீரகத்தால் என்ற அளவையே GFR.

Dr. Venkatesh Natarajan

Read More

இரத்த சுத்திகரிப்பு ( Dialysis) – 2

இரத்த சுத்திகரிப்பு ( Dialysis) – 2

 

இரத்த சுத்திகரிப்பு வைத்தியத்தின் குறிக்கோள் என்ன?

  1. வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது அதாவது அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகளை தொய்வின்றி, உடல் தொந்தரவுகள் இன்றி செய்ய வைப்பது. Quality of life என்பர்.
  2. சிறுநீரக செயலிழப்பின் உயிர் மாய்க்கும் பிற உறுப்பு சிக்கல்களிலிருந்து காப்பது. Complication free survival.
  3. அடிக்கடி மருத்துவமனைக்கு வருவதை தவிர்ப்பது. Prevention of hospitalisation.
  4. வாழ்நாளை நீட்டிப்பது.

இது சிறுநீரகத்திற்கான சர்வரோக நிவாரணி அல்ல. உறுப்பு மாற்றே சிறந்த உபாயம்.

 

சிறந்த இரத்த சுத்திகரிப்பு வைத்தியத்தின், நிலையத்தின் பண்புகள்.

  1. சிறுநீரக மருத்துவரின் மேற்பார்வை. (என்றாவது வந்து போவது, மாதம் ஒரு முறையோ, வாரத்தில் ஒரிரு முறையோ வருவதல்ல)
  2. தரகட்டுபாடுகள் மேற்பார்வை.
  3. Technician கள் மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை தருவது. (பல இடங்களில் வெறும் technician களை மட்டுமே நம்பி நிலையங்கள் இயங்குவது சாபக்கேடு)
  4. கழிவு நீக்கம் சரிவர நடக்கிறதா என்ற மருத்துவ இரத்த பரிசோதனைகள்.
  5. பிற துறை வல்லுனர்களின், குறிப்பாக cardiologist, vascular surgeon போன்றவர்களின் availability.
  6. தரமான தீவிர சிகிச்சை பிரிவின் back up போன்றவை.
  7. தரமான நீர் சுத்திகரிப்பு வசதி, ( RO plant) மற்றும் தொற்று நோய் காப்பு முறைகளின் பயன்பாடு.

 

Dr. Venkatesh Natarajan

Read More

இரத்த சுத்திகரிப்பு வைத்தியம்: (Dialysis)

இரத்த சுத்திகரிப்பு வைத்தியம்: (Dialysis)

பாகம்- 1.

1960 களுக்கு முற்றபட்ட காலங்களில் சிறு நீரகங்கள் என்ற உயிர்வாழ அத்தியாவசிய உறுப்புகள் முழுவதும் செயலிழந்துவிட்டால், ஒன்றும் செய்ய இயலாத நிலையே இருந்தது. இறப்பு நிச்சயம்.

உயிரியக்கம் ஒரு வேதிசெயல். பல்லாயிரக்கணக்கான வேதி செயல்களால் இயங்குகிறது. இதன் வெளிப்பாடு அன்றாடம் பல தேவையற்ற கழிவுகள் உருவாகிறது. இத்தகைய கழிவு பொருட்களை உடலில் இருந்த அகற்றாவிட்டால் உயிர்வேதி செயல்கள் முடங்கிவிடும், உயிர்பிரிந்துவிடும். இதற்காக பரிணாம வளர்ச்சி தோற்றுவித்த உறுப்பே நமது சிறுநீரகம். இந்த கழிவுகள் இரத்த சுழற்சியினால், இரத்தத்தில் சுமக்கப்பட்டு சிறு நீரகங்களை சென்று அடையும். ஒவ்வொரு நிமிடமும் 1 ml என்ற அளவில் சிறுநீரில் இக்கழிவுகள் அகற்றப்படுகின்றன. ஓவ்வொரு நிமிடமும் 120ml இரத்தம் முழுவதிலும் உள்ள கழிவுகள் அகற்றப்படுகின்றன.

இந்த கழிவுகள் “ உப்பு” என்று பொதுவாக அழைக்கப்படுவது அவை இரசாயனங்கள் எனபதால், உணவிலுள்ள உப்பு வேறு, இங்கு குறிக்கப்படும் உப்பு வேறு.

இரத்த சுழற்சி உள்ள வரை, உயிர் உள்ள வரை இத்தகைய கழிவுகள், உப்புகள் உற்பத்தி ஆகிக்கொண்டிருக்கும். இவற்றை நீக்குவது சிறுநீரகம் செய்யவேண்டிய பல பணிகளில் ஒன்று.

Hb உற்பத்தி, இரத்தத்தின் அமிலத்தன்மையை பாதுகாப்பது, எலும்புகளை பலப்படுத்துவது, இரத்த அழுத்தத்தை சீர் படுத்துவது, இருதயத்தை பாதுகாப்பது, நீர் நிலையை சமன் படுத்துவது, மருந்து கழிவுகளை அகற்றுவது, நோய் எதிர்ப்பை உருவாக்குவது, என பலமுக்கிய பணிகளை சிறுநீரகங்கள் செய்கின்றன.

இவை அணைத்தும் உயிரோட்டமுள்ள வடிகட்டிகளான, nephrons, செய்கின்றன! 10 லட்ச வடிகட்டிகளானதே இந்த சிறுநீரகம். இந்த வடிகட்டிகள் இறந்துவிட்டால்

அதையே சிறுநீரக செயலிழப்பு ( நிரந்தர நாள் பட்ட சிறுநீரக சிதைவு நோய், chronic kidney disease, chronic renal failure, CKD) என்கின்றோம்.

 

நோயினால் ( முக்கியமாக சர்க்கரை, இரத்த அழுத்தம், தேவையற்ற சுயமாக உண்ணும் மருந்துகள்) இறந்து விட்ட வடிகட்டிகளை( nephrons) சிறுநீரகங்களை நாம் உயிர்த்தெழ செய்யமுடியது. இங்குதான் nephrology  என்கின்ற nephronகளை பற்றிய அறிவியல் தெரிந்த மருத்துவம் வினையாற்றுகிறது. மரணம் நிச்சயம் என்ற சூழலை திருத்த இரத்தங்களில் உயிர் உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட சில கழிவுகளை மனிதர்கள் கருவிகள் கொண்டு செயற்கையாக அகற்றும் ஏற்பாடே இரத்த சுத்திகரிப்பு என்று அழைக்கப்படுகிறது. பல வகையான சுத்திகரிப்பு முறைகளில் பரவலாக பயன்படுத்த படும் முறை இது.

இறந்துவிட்ட சிறுநீரகங்களின் அணைத்து பணிகளையும் dialysis செய்யாது. செத்துவிட்ட, உயிர்ப்பிக்க முடியாத உறுப்புக்கு நிகர் மற்றொரு உயிரோட்டமுள்ள சிறுநீரகமே! (Transplant)அது தான் இக்காலத்திய தீர்வு!

எனினும் உறுப்பைமாற்ற பற்றாக்குறைகள் நிதர்சனம். இங்குதான் செயற்கை dialysis உயிர்வாழ உதவுகிறது. மரணம் நிச்சயம் என்ற சூழலிலிருந்து நீண்ட காலம் உயிர்வாழ, செயல்பட, சமூகத்தில் தன் கடமைகளை பூர்த்தி செய்ய உதவுவதே இதன் நோக்கம்.

இரத்த சுத்திகரிப்பு வைத்தியம் வாழ்நாளை நீட்டிக்கும்  என்பது உண்மை

ஆனால், நோயின் எந்த நிலையில், எந்த வயதில், எவ்வாறு, எத்தனை

உறுப்புகளின் பழுதுகளுடன், எவ்வளவு

அறிவியல் பூர்வமாக, தொடர்ந்து செய்யப்படுகிறது என்பதை பொருத்தது.

நோயாளியின் புரிதலின்றி ஒத்த முயற்சியின்றி வாழ்நாளை நீட்டிப்பது,

சார்பற்று (independent) தொடர்ந்து  இயங்குவது, சிக்கல்களினால் திரும்ப திரும்ப படுக்கையில் வீழ்வதை தடுப்பது போன்றவை சாத்தியமில்லை.  மனிதர்களால், வருத்தும் நோயின் பிடியிலிருந்து மனிதர்களை காக்க முயலுவதே மருத்துவம்.

அது இயற்கை தந்தது அல்ல மனிதன் செய்வது. அதனாலேயே மருத்துவ முறைகள் முழுமையானது அல்ல.

 

Dr. Venkatesh Natarajan. Nephrologist

Read More

சிறுநீரக செயலிழப்பு இரு வகைப்படும்

சிறுநீரக செயலிழப்பு இரு வகைப்படும்.

தற்காலிகமான, நிரந்தரமான செயலிழப்புகள். Acute kidney injury, chronic kidney disease என்று முறையே இவை அழைக்கப்படுகின்றன.

 

AKI – acute kidney injury. இதற்கான காரணிகள் பல.

  1. குறைந்த இரத்த அழுத்தம், அதிகமான இரத்த அழுத்தம், சிறுநீரக இரத்த ஓட்டம் குறைதல், தடைபடுதல், இருதய, கல்லீரல் செயலிழப்புகள், மூளை வாதம், நோய்கிருமி தொத்து, இரத்தம் சீழாதல், விஷம் அருந்துதல், இரத்த இழப்புகள், ( accident, coagulation disorder போன்றவை) சீதபேதி, வயிற்றுப்போக்கு, மருந்துகளின் ஒவ்வாமை, தீவிரமான பிற வியாதிகள், உயிர் கொல்லி நோய்கள் போன்றவை.
  2. சிறுநீரக வடிகட்டி நோய்கள், autoimmune( ஏமச்சிதைவு) வியாதிகள், சர்க்கரை நோய், தவறான மாற்று மருத்துவம், பெரிய அறுவை சிகிச்சைகள்,
  3. சிறுநீரக பாதை கல் அடைப்பு, மூத்திரக்காய் வீக்கம், சிறுநீரக மற்றும் மூத்திர பாதை கிருமி தீவிரதொத்து, என்பனப்போன்றவை சில.

CKD – chronic kidney disease. 5 stages. (GFR ஐ கொண்டு கணிக்கப்படுகிறது)

  1. மேற்கூறிய காரணிகள் உரிய நேரத்தில் கவனிக்கப்படாதது.
  2. சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக மற்றும் பிற புற்றுநோய்கள், பரம்பரை வியாதிகள் என்பன காரணிகளாம்.

 

CKD ஐந்தாம் நிலையே end stage என்றழைக்கப்படுகிறது.

 

Dr. Venkatesh Natarajan.

Read More