இரத்த சுத்திகரிப்பு ( Dialysis) – 2
இரத்த சுத்திகரிப்பு வைத்தியத்தின் குறிக்கோள் என்ன?
- வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது அதாவது அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகளை தொய்வின்றி, உடல் தொந்தரவுகள் இன்றி செய்ய வைப்பது. Quality of life என்பர்.
- சிறுநீரக செயலிழப்பின் உயிர் மாய்க்கும் பிற உறுப்பு சிக்கல்களிலிருந்து காப்பது. Complication free survival.
- அடிக்கடி மருத்துவமனைக்கு வருவதை தவிர்ப்பது. Prevention of hospitalisation.
- வாழ்நாளை நீட்டிப்பது.
இது சிறுநீரகத்திற்கான சர்வரோக நிவாரணி அல்ல. உறுப்பு மாற்றே சிறந்த உபாயம்.
சிறந்த இரத்த சுத்திகரிப்பு வைத்தியத்தின், நிலையத்தின் பண்புகள்.
- சிறுநீரக மருத்துவரின் மேற்பார்வை. (என்றாவது வந்து போவது, மாதம் ஒரு முறையோ, வாரத்தில் ஒரிரு முறையோ வருவதல்ல)
- தரகட்டுபாடுகள் மேற்பார்வை.
- Technician கள் மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை தருவது. (பல இடங்களில் வெறும் technician களை மட்டுமே நம்பி நிலையங்கள் இயங்குவது சாபக்கேடு)
- கழிவு நீக்கம் சரிவர நடக்கிறதா என்ற மருத்துவ இரத்த பரிசோதனைகள்.
- பிற துறை வல்லுனர்களின், குறிப்பாக cardiologist, vascular surgeon போன்றவர்களின் availability.
- தரமான தீவிர சிகிச்சை பிரிவின் back up போன்றவை.
- தரமான நீர் சுத்திகரிப்பு வசதி, ( RO plant) மற்றும் தொற்று நோய் காப்பு முறைகளின் பயன்பாடு.
Dr. Venkatesh Natarajan