Share on                    

Opening Hours : 24 x 7
  Contact : Emergency: +91 8939 59 9999

இரத்த சுத்திகரிப்பு வைத்தியம்: (Dialysis)

இரத்த சுத்திகரிப்பு வைத்தியம்: (Dialysis)

பாகம்- 1.

1960 களுக்கு முற்றபட்ட காலங்களில் சிறு நீரகங்கள் என்ற உயிர்வாழ அத்தியாவசிய உறுப்புகள் முழுவதும் செயலிழந்துவிட்டால், ஒன்றும் செய்ய இயலாத நிலையே இருந்தது. இறப்பு நிச்சயம்.

உயிரியக்கம் ஒரு வேதிசெயல். பல்லாயிரக்கணக்கான வேதி செயல்களால் இயங்குகிறது. இதன் வெளிப்பாடு அன்றாடம் பல தேவையற்ற கழிவுகள் உருவாகிறது. இத்தகைய கழிவு பொருட்களை உடலில் இருந்த அகற்றாவிட்டால் உயிர்வேதி செயல்கள் முடங்கிவிடும், உயிர்பிரிந்துவிடும். இதற்காக பரிணாம வளர்ச்சி தோற்றுவித்த உறுப்பே நமது சிறுநீரகம். இந்த கழிவுகள் இரத்த சுழற்சியினால், இரத்தத்தில் சுமக்கப்பட்டு சிறு நீரகங்களை சென்று அடையும். ஒவ்வொரு நிமிடமும் 1 ml என்ற அளவில் சிறுநீரில் இக்கழிவுகள் அகற்றப்படுகின்றன. ஓவ்வொரு நிமிடமும் 120ml இரத்தம் முழுவதிலும் உள்ள கழிவுகள் அகற்றப்படுகின்றன.

இந்த கழிவுகள் “ உப்பு” என்று பொதுவாக அழைக்கப்படுவது அவை இரசாயனங்கள் எனபதால், உணவிலுள்ள உப்பு வேறு, இங்கு குறிக்கப்படும் உப்பு வேறு.

இரத்த சுழற்சி உள்ள வரை, உயிர் உள்ள வரை இத்தகைய கழிவுகள், உப்புகள் உற்பத்தி ஆகிக்கொண்டிருக்கும். இவற்றை நீக்குவது சிறுநீரகம் செய்யவேண்டிய பல பணிகளில் ஒன்று.

Hb உற்பத்தி, இரத்தத்தின் அமிலத்தன்மையை பாதுகாப்பது, எலும்புகளை பலப்படுத்துவது, இரத்த அழுத்தத்தை சீர் படுத்துவது, இருதயத்தை பாதுகாப்பது, நீர் நிலையை சமன் படுத்துவது, மருந்து கழிவுகளை அகற்றுவது, நோய் எதிர்ப்பை உருவாக்குவது, என பலமுக்கிய பணிகளை சிறுநீரகங்கள் செய்கின்றன.

இவை அணைத்தும் உயிரோட்டமுள்ள வடிகட்டிகளான, nephrons, செய்கின்றன! 10 லட்ச வடிகட்டிகளானதே இந்த சிறுநீரகம். இந்த வடிகட்டிகள் இறந்துவிட்டால்

அதையே சிறுநீரக செயலிழப்பு ( நிரந்தர நாள் பட்ட சிறுநீரக சிதைவு நோய், chronic kidney disease, chronic renal failure, CKD) என்கின்றோம்.

 

நோயினால் ( முக்கியமாக சர்க்கரை, இரத்த அழுத்தம், தேவையற்ற சுயமாக உண்ணும் மருந்துகள்) இறந்து விட்ட வடிகட்டிகளை( nephrons) சிறுநீரகங்களை நாம் உயிர்த்தெழ செய்யமுடியது. இங்குதான் nephrology  என்கின்ற nephronகளை பற்றிய அறிவியல் தெரிந்த மருத்துவம் வினையாற்றுகிறது. மரணம் நிச்சயம் என்ற சூழலை திருத்த இரத்தங்களில் உயிர் உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட சில கழிவுகளை மனிதர்கள் கருவிகள் கொண்டு செயற்கையாக அகற்றும் ஏற்பாடே இரத்த சுத்திகரிப்பு என்று அழைக்கப்படுகிறது. பல வகையான சுத்திகரிப்பு முறைகளில் பரவலாக பயன்படுத்த படும் முறை இது.

இறந்துவிட்ட சிறுநீரகங்களின் அணைத்து பணிகளையும் dialysis செய்யாது. செத்துவிட்ட, உயிர்ப்பிக்க முடியாத உறுப்புக்கு நிகர் மற்றொரு உயிரோட்டமுள்ள சிறுநீரகமே! (Transplant)அது தான் இக்காலத்திய தீர்வு!

எனினும் உறுப்பைமாற்ற பற்றாக்குறைகள் நிதர்சனம். இங்குதான் செயற்கை dialysis உயிர்வாழ உதவுகிறது. மரணம் நிச்சயம் என்ற சூழலிலிருந்து நீண்ட காலம் உயிர்வாழ, செயல்பட, சமூகத்தில் தன் கடமைகளை பூர்த்தி செய்ய உதவுவதே இதன் நோக்கம்.

இரத்த சுத்திகரிப்பு வைத்தியம் வாழ்நாளை நீட்டிக்கும்  என்பது உண்மை

ஆனால், நோயின் எந்த நிலையில், எந்த வயதில், எவ்வாறு, எத்தனை

உறுப்புகளின் பழுதுகளுடன், எவ்வளவு

அறிவியல் பூர்வமாக, தொடர்ந்து செய்யப்படுகிறது என்பதை பொருத்தது.

நோயாளியின் புரிதலின்றி ஒத்த முயற்சியின்றி வாழ்நாளை நீட்டிப்பது,

சார்பற்று (independent) தொடர்ந்து  இயங்குவது, சிக்கல்களினால் திரும்ப திரும்ப படுக்கையில் வீழ்வதை தடுப்பது போன்றவை சாத்தியமில்லை.  மனிதர்களால், வருத்தும் நோயின் பிடியிலிருந்து மனிதர்களை காக்க முயலுவதே மருத்துவம்.

அது இயற்கை தந்தது அல்ல மனிதன் செய்வது. அதனாலேயே மருத்துவ முறைகள் முழுமையானது அல்ல.

 

Dr. Venkatesh Natarajan. Nephrologist

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *