Share on                    

Opening Hours : 24 x 7
  Contact : Emergency: +91 8939 59 9999

உறுப்பு தானம்

உறுப்பு தானம்

உறுப்பு தானம் இரண்டு வகைப்படும் உயிரோடிருப்பவர் தானம் தருவது, மூளைச்சாவு அடைந்த பின்பு தானம் தருவது, உடலையே மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக தானம் தருவது.

இதில் முக்கியமாக தெரிந்து கொள்ளவேண்டியது தானம் தருபவர் இறந்துவிட்ட பின்பு அவரின் உறவினர் அனுமதித்தால் மட்டுமே தானம் செய்யமுடியும்.

இருதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல், எலும்பு, தோல், குடல், கண்விழி வெண்படலம் (cornea), இரத்தக் குழாய்கள், (சிரை, தமனி), கணையம், தசைநார்கள் போன்றவைகளை தானமாக தரலாம்.

உயிரோடிருப்பவர் இரத்தம், என்பு மஜ்ஜை சிறுநீரகம், கணையம், கல்லீரல், குடல், தோல் போன்றவற்றை தானமாக தர இயலும்.

தானமாக உடலைத்தர ஒருவர் உறுப்பு தானத்தை நடைமுறைபடுத்தும் NOTTO, ROTTO போன்ற அமைப்புகளிடம் பதிந்து, donor card ஒன்றை பெற்றுக்கொள்ளவேண்டும். இந்த card வெறும் அங்கீகாரம் மட்டுமே, card இருப்பதாலேயே தானம் தர இயலாது, இறந்தவர் உறவினரின் அனுமதி வேண்டும்.

அவ்வாறு ஒருவர் இறந்துவிட்டால், இந்த card இல் உள்ள மருத்துவ குழுவிற்கு தகவல் தரவேண்டும் உடனடியாக. அவர்கள் விரைந்து வந்து கண்வெண்படலம் போன்றவற்றை எடுத்துக்கொள்வார்கள்.

ஆனால், மூளைச்சாவு அடைந்தவர் மட்டுமே பிற உறுப்புகளை தானமாக தர இயலும். இது மருத்துவ மனையில் மட்டுமே சாத்தியம்.

வருடந்தோறும் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உறுப்புமாற்று தேவையாக உள்ளது. ஆனால் பத்து லட்சத்தில் ஒருவர் மட்டுமே தானமாக தருகிறார்கள். 2017 இல் இந்தியாவில் 905 நபர்கள் மட்டுமே தானம் தந்திருப்பதாக ஒரு தகவல். உறுப்பு தானம் இந்திய அளவில் 2% சதவிகித தேவையையே நிறைவு செய்கிறது.

உறப்பு தானத்தில் இந்தியாவின் முன்னோடி தமிழகம். Tamil Nadu  state transplant authority என்ற அமைப்பை முதலில் ஏற்படுத்தி உறுப்பு தானங்களை ஊக்குவித்த மாநிலம் தமிழகம். (இன்று இதையும் ஒன்றிய அரசு கட்டுபடுத்த நினைக்கிறது) இந்தியாவில் இந்த மாடலை தொடர்ந்தே NOTTO, ROTTO போன்றவை ஏற்படுத்தபட்டன.

இந்த TRANSTAN ஐ ஏற்படுத்த மருத்துவர் முனைவர் அமலோர்பாவநாதன்,  சிரை அறுவை துறை தலைவர், MMC ( இன்று TN planning commission இல் உள்ளார்) இதை ஏற்படுத்த உழைத்தவை ஏராளம். முற்போக்கு தமிழகத்தின்  மருத்துவ துறை எத்தனையோ நல்ல மருத்துவர்களால் கட்டப்பட்டது. கண்ணுக்கும், இந்த மண்ணுக்கும் தெரியாதவர்களே அதிகம்.

உறுப்பு தானம் உயிர் காக்கும் செயல், வாழ்நாளை நீட்டிக்கவும், பிறர் தயவு அல்லாது அன்றாடம் தம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் பயன்படும்.

உறுப்பு செயலிழப்பினால் நிச்சையமான மரணித்திலிருந்து காக்க உறுப்பு தானம்! உதவும்

உடலை தானம் தந்தால் மருத்துவ மாணாக்கர்க்கும், ஆய்வுகளுக்கும் பயன்படும்.

Mohan foundation என்ற NGO , உறுப்பு தானம் தர எண்ணுபவர்

களுக்கு மேலும் பல தகவல்களையும் பதிவதற்கான முறைகளையும் செய்யும்.

இணையத்தில் எளிதாக பதிந்து கொள்ளலாம்.

 

Dr. Venkatesh Natarajan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *