சிறுநீரக செயலிழப்பு இரு வகைப்படும்.
தற்காலிகமான, நிரந்தரமான செயலிழப்புகள். Acute kidney injury, chronic kidney disease என்று முறையே இவை அழைக்கப்படுகின்றன.
AKI – acute kidney injury. இதற்கான காரணிகள் பல.
- குறைந்த இரத்த அழுத்தம், அதிகமான இரத்த அழுத்தம், சிறுநீரக இரத்த ஓட்டம் குறைதல், தடைபடுதல், இருதய, கல்லீரல் செயலிழப்புகள், மூளை வாதம், நோய்கிருமி தொத்து, இரத்தம் சீழாதல், விஷம் அருந்துதல், இரத்த இழப்புகள், ( accident, coagulation disorder போன்றவை) சீதபேதி, வயிற்றுப்போக்கு, மருந்துகளின் ஒவ்வாமை, தீவிரமான பிற வியாதிகள், உயிர் கொல்லி நோய்கள் போன்றவை.
- சிறுநீரக வடிகட்டி நோய்கள், autoimmune( ஏமச்சிதைவு) வியாதிகள், சர்க்கரை நோய், தவறான மாற்று மருத்துவம், பெரிய அறுவை சிகிச்சைகள்,
- சிறுநீரக பாதை கல் அடைப்பு, மூத்திரக்காய் வீக்கம், சிறுநீரக மற்றும் மூத்திர பாதை கிருமி தீவிரதொத்து, என்பனப்போன்றவை சில.
CKD – chronic kidney disease. 5 stages. (GFR ஐ கொண்டு கணிக்கப்படுகிறது)
- மேற்கூறிய காரணிகள் உரிய நேரத்தில் கவனிக்கப்படாதது.
- சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக மற்றும் பிற புற்றுநோய்கள், பரம்பரை வியாதிகள் என்பன காரணிகளாம்.
CKD ஐந்தாம் நிலையே end stage என்றழைக்கப்படுகிறது.
Dr. Venkatesh Natarajan.