சில அறிவுரைகள்
- “நீரிழிவு நோய் சிறுநீரகத்தை சீரழிக்கும் நோய். உயர் இரத்த அழுத்தம் அதன் உடன் பிறந்த சகோதரன்! இவை அறிகுறி இல்லா பொல்லாத்திருடர்கள்!”
பரிசோதித்து பலனைடைவீர். ஆரோக்கியம் காப்பீர்!
- 60 வயது அல்லது மேல், நீரிழிவு நோய், உயர் இரத்தழுத்தம், சிறுநீரில் நுரையாக புரதம் வெளியேறல், கற்கள், இருதய நோய், புகை பழக்கம், கண்ட மருந்துகளை சுயமாக உண்ணல், மூட்டு மற்றும் பிறவிக் கோளாறு களினால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.
பரிசோதித்து அறிவீர்!
- சிறுநீரக வியாதிகளை உடல் தொந்தரவு ஏற்படுமுன்னரே கண்டுபிடிப்பது நலம் தரும். பரிசோதனை மூலமே அறிய முடியும். நோய் முற்றிய பின்னரே உடல் தொந்தரவுகள் தோன்றும்.ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் தடுக்கவும் குணப்படுத்தவும் முடியும்.
- ஆரோக்கியம் என்பது மருந்துகளில் இல்லை, அறிவியலில் இல்லை. அது ஒரு சமுதாய பொருளாதார சிக்கல். அதைதீர்ப்பது மக்களால் மட்டுமே இயலும்.
படித்து அறிவது அறிவுடைமை.
- கால்வீக்கம், மூச்சிரைப்பு, உடல் இளைப்பு, பசியின்மை, குமட்டல், வாந்தி,அடிக்கடி இரவிலும் சிறுநீரு கழித்தல்
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்.
பரிசோதித்து அறிவீர்!
- உலம்முழுவதிலும் 195 மில்லியன் பெண்கள் சிறுநீரக வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 இலட்சம் மக்களில் 150-250 மக்கள் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பரிசோதித்து பலனடைவீர், ஆரோக்கியம் காப்பீர்.
- ஆரோக்கியத்தின் அளவை வெறும் பணம் அல்ல. அதன் மதிப்பு அளவிற்கடங்காது!
வருமுன் காப்பதே உசிதம்.
Dr. Venkatesh Natarajan.